வலிமை: வாழ்வின் அடையாளம்!

2019-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஷீபா தேவராஜ்.
வலிமை: வாழ்வின் அடையாளம்!
Updated on
2 min read


2019-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஷீபா தேவராஜ். இது தவிர, சென்னையில் நடைபெற்ற 10கி.மீ. மாரத்தான் போட்டி மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்ற 21கி.மீட்டர்  மாரத்தான் போட்டியில் 2-ஆவது இடம் வென்றவர் இவர்.  சென்னையில் கிரீடு உடலமைப்பு மற்றும் வலிமை சார்ந்த நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

உடற் பயிற்சி மற்றும்  ஊட்டச்சத்து குறித்து?

தகவல் தொழில்நுட்ப பெரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ஊதியம் அதிகமாக கிடைத்தது. ஆனால் மனதிற்கு திருப்தி இல்லை.  அதனால்  ஒருகட்டத்தில்  வேலையைவிட்டுவிட்டு விளையாட்டு துறையில் இயங்க தொடங்கினேன்.  உலகளாவிய விளையாட்டு போட்டிகளுக்கு உடலமைப்பு மிகவும் அவசியம். அதனால், என்னால் முடிந்தளவு விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு  உடற்பயிற்சியை சொல்லிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இன்றைக்கு திறமையிருந்தும் உடல் ஒத்துழைக்காமல் போட்டிகளில் இருந்து வெளியேறுபவர்களையும், திறமைசாலியாக இருந்தும் வெளியே வர தயங்குபவர்களையும் கண்டுப்பிடித்து ஊக்கப்படுத்தியும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன்.

லட்சியத்தை நோக்கி முன்னேற அதனை பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டு செயல் பட்டால் நமது திறமை வெளிப்பட்டு வெற்றியடையலாம். நடக்க முடியாமல் மூட்டு வலியுடன் எங்களிடம் ஒரு நபர் வந்தார். அவரது இலக்கு மூட்டு வலியின்றி நன்கு நடப்பது மட்டுமே. 120கிலோ எடை இருந்த அவர் என்னுடைய 3மாத பயிற்சியாலும், உணவு கட்டுப்பாட்டாலும் எடையை 95கிலோவாக குறைத்து நடக்க ஆரம்பித்தது மட்டுமல்லாமல் இப்போது விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெறுகிறார் இதை அவருடைய தன்னம்பிக்கை என்று தான் சொல்வேன்.

இன்று,  ஊட்டச்சத்துக் குறைவினால் உடல் பருமன் குறைந்து காணப்பட்டவர்களின் எண்ணிக்கைக் குறைந்து, ஊட்டச்சத்து அதிகரிப்பால் உடல்பருமன் கூடிய மக்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. சரியான ஊட்டச்சத்து அளவின்படி உடல்பருமன் நிலை (பிஎம்ஐ) 18.5க்கும் குறைவாக இருக்க வேண்டும். அவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்டு எடை கூட வேண்டும். அதே நேரத்தில் ஊட்டச்சத்து சரியான நிலைமையில் உள்ளவர்கள் அதிகமாக ஊட்டச்சத்து உணவை உண்ணாமல், எடை ஏற்றத்தை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் பளுதூக்குவதன் அவசியம்குறித்து ?

இரவில் நன்றாக உறங்குகிறோமா, காலையில் எழும் போது புத்துணர்ச்சியோடு இருக்கிறோமா அல்லது நமக்கு அமிலத்தன்மைப் பிரச்னை, உடல் உப்புசம் மற்றும் உணவு செறிமானம் இன்மை ஆகியவை இருக்கின்றனவா, உணவு உண்ட பின்னரும் கூட மேலும் சாப்பிட ஆசை ஏற்படுகிறதா? உடற்பயிற்சி செய்கிறோமா என்பன நம் உடல் நலத்தை கணிக்கின்றன.

அறிவியல் கூற்றுகளின்படி மேற்கூறப்பட்ட நிலைமைகளை ஒருவரின் வளர்சிதை உடல் நலத்தின் குறியீடுகளாகக் கருதலாம். அவை  உங்களின் ஹார்மோன்கள் சிறப்பாக செயல்படுகின்றனவா? இதய நலம் எப்படி உள்ளது? வயிற்றுக் குடற்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் பரவலாக உள்ளனவா? உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுக்குள் உள்ளதா போன்றவையாகும்.

இவை தொற்று அல்லாத நீரிழிவு, புற்று, சினைப்பை சார்ந்த நோய்கள், தைராய்டு குறைபாடுகள், இதய நலம், மன நலம் போன்றவற்றின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் காரணிகளாகும். ஆண்களின் உடல்வாகு மாறக் காரணம் அவர்களுடைய டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அது 10சதவிகிதம் தான் நம்முடைய பெண் சமூகத்திற்கு உள்ளது. மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சியினை மேற்கொள்வது அவரது தனிப்பட்ட விருப்பத்தையும் உடல் நிலையையும் பொறுத்தது.

திருமணத்திற்கு பின் உடலை பராமரிப்பதில் ஆண், பெண் என்ற பேதம் இருக்கக் கூடாது. உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது  உடலில் உள்ள  குறைபாடுகள் நீங்குவதந்கு  நிறைய வாய்ப்புகள் உள்ளது. காயம் ஏற்பட்ட காலங்களில் அவை சரியான பின்னரே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பெண்கள் பளுதூக்குவது நல்லது.

ஏனெனில் எலும்பு அடர்த்தியை தக்கவைத்துக் கொள்வதற்கும், தசைகளை பாதுகாக்கவும் இது உதவும். பயம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தங்கள் உடல் நலத்தையும் வாழ்க்கையும் தரமாக வைத்துக் கொள்ள வலிமை முக்கியம் என்பதில் குறிக்கோள் இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com