பாக்டீரியாவை விரட்டும் மசாலாக்கள்!
கிராம்பு, பட்டை, சோம்பு, பூண்டு, ஏலம், வெங்காயம், இஞ்சி போன்ற மசாலா பொருள்கள் பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டவை என்று அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இது குறித்த ஆய்வில்


கிராம்பு, பட்டை, சோம்பு, பூண்டு, ஏலம், வெங்காயம், இஞ்சி போன்ற மசாலா பொருள்கள் பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டவை என்று அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இது குறித்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மசாலா பொருள்களை உணவில் தாராளமாக சேர்த்து உண்பவர்கள், சாதாரண மசாலா அற்ற உணவு உண்பவர்களைவிட அதிக நாள்கள் உயிர் வாழ்வதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
நிறம், மணம், குணத்திற்காகத்தான் உணவுகளில் மசாலாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் மசாலாக்களுக்கும் மருத்துவ பலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் மைசூர் உணவுத் தொழில்நுட்ப மைய ஆய்வு அறிஞர் வி.பிரகாஷ்.
சாப்பிடும் மசாலா பொருள்களில் உள்ள நல்ல அம்சங்கள் இவை:
செம்மிளகு : வியர்க்கும்போது தோல் காற்றாட உதவுகிறது. ரத்தத்தை இளக்கி உறைவதைத் தாமதிக்க வைக்கிறது.
சீரகம்: சர்க்கரை வியாதி வராமல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கிறது. அந்த வியாதியால் வரக்கூடிய கண்புரை நோயை தடுக்கிறது.
புளி: ப்ளூரஸில் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
சோம்பு : வீக்கத்தைக் குறைப்பதும், ஜீரணத்துக்கும் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...