அனைவருக்குமே உடலை கச்சிதமாய் வைத்துக் கொள்ள ஆசை. ஆரோக்கியமாக வாழ உதவும் வழிமுறைகள் பின்வருமாறு:
"சூப்பர் டயட்ஸ்' என்று கூறி சில உணவுகளால் எடை குறையும் என்கிறார்கள். இது உண்மையல்ல. உடலில் இழக்கும் கலோரியின் அளவுக்கு ஈடாக ஏற்றினால் எடை அப்படியே இருக்கும்.
எடை அதிகரிக்க சர்க்கரை காரணம் கிடையாது. அளவாக சர்க்கரையை சாப்பிடுவதும் பாதுகாப்பானதே! கலோரியை கூட்டாத சர்க்கரை பதார்த்தங்களை சாப்பிடுவதால் உடல் எடை கூடாது.
3 தடவை சாப்பிட்டாலும், 6 தடவை சாப்பிட்டாலும் கலோரி ஒரே அளவுதான் ஏறும். எவ்வளவு கலோரி சாப்பிடுகிறோம் அல்லது இழக்கிறோம் என்பதை வைத்தே உடல் கொழுப்பு முடிவாகிறது.
உடற்பயிற்சி செய்துவிட்டு, குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடல் குளிராது. உடற் பயிற்சி மூலம் உடல் இறுகியிருந்தால் அதனை சரிசெய்யும்.
உடற்பயிற்சி முடிந்தவுடன் "சப்ளிமென்டரி'-களை சாப்பிட்டால், எடை குறையாது. மருத்துவர் ஆலோசனையே முக்கியம்.
உடற்பயிற்சி மார்பக அளவை மாற்றாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அப்படி செய்ய இயலாது.
குந்தி உட்காருவதால் முட்டிக்கு வலு என்பது சரியல்ல. மாறாக, மாலையில் பயிற்சி செய்வது உதவும். ஆனால், மருத்துவரை கலந்து ஆலோசித்து மேற்கொள்வது நல்லது. முட்டிகளில் காயம் இருக்குமெனில், மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியமானது.
காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது. இருப்பினும் மாலையில் உடற்பயிற்சி செய்தால் தசை நார்களுக்கு வலுவூட்டும். உடல், பால் சார்ந்த பண்புக் கூறுகளை வளர்ச்சி அடைய செய்யும். காலை ஆனாலும், மாலை ஆனாலும் சரி; தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்வது சிறப்பு.
ஓடுவது எடையைக் குறைக்கும். ரத்தம் சார்ந்த விஷயங்களின் இயக்கத்துக்கு ஓடுவது நல்லது. இதைவிட நீச்சல், சைக்கிள் ஓட்டுவது ஆகியன மிகவும் நல்லது. எது செய்தாலும் கலோரி குறைப்புக்கு உதவினால் சரி.
உடற்பயிற்சி முடிந்ததும் ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பது சரியா? அது கட்டாயம் அல்ல. மாறாக, 2 மணி நேரத்துக்குள் சாப்பிடுவது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


