தேவைப்படும் பொருள்கள்:
முளை கட்டிய பயறு- 1 கிண்ணம்
இடியாப்ப மாவு- 2 கிண்ணம்
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
குடை மிளகாய்- 1 (நறுக்கிக் கொள்ளவும்)
மிளகாய்த் தூள்- 1 மேசை கரண்டி
கொத்துமல்லித் தழை- சிறிதளவு
கடுகு- சிறிதளவு
பெருங்காயத் தூள்- சிறிதளவு
எண்ணெய்- 4 மேசை கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
இடியாப்ப மாவை வெந்நீர் விட்டு பிசைந்து, இட்லி தட்டில் இடியாப்பமாகப் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும். சிறிது ஆறிய பிறகு உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கி முளை கட்டிய பயறு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து குடை மிளகாயும் சேர்த்து கால் டம்பளர் நீர்விட்டு, 5 நிமிடம் மூடிவிடவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து விடவும். இதனுடன் உதிர்த்த இடியாப்பத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொத்துமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்

ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக்கொடி! கனிமொழி எம்.பி. வேண்டுகோள்! | DMK

இமயமலையில் தொலைந்த அணுசக்தி சாதனம்... மிஸ்டர் எக்ஸ் படத்தின் முன்னோட்ட விடியோ!

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


