பாலக் பூரி
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்துகொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கவும்.


தேவையானவை:
கோதுமை மாவு- 2 கிண்ணம்
பசலைக் கீரை- 1 கட்டு
பச்சை மிளகாய்- 3
இஞ்சி- 1 துண்டு
நெய்- 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்துகொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கவும். பின்பு, அதை ஆறவைத்து நீரை வடித்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். இந்த விழுதுடன் கோதுமை மாவு, நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர், அதை சின்ன சின்ன பூரிகளாகச் செய்து, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...