தீபாவளி பட்சண டிப்ஸ்...

ஒரு கப் குலோப் ஜாமீன் மாவுடன் அதே அளவில் சிறிதளவு கேசரி பவுடர் கலந்து,  கட்டியில்லாமல் கரைத்து இரண்டு பங்கு சர்க்கரை, மூன்று பங்கு நெய் சேர்த்துக் கிளறி முந்திரியை வறுத்து போட்டால்  புதுமையான அல்வா ரெ
தீபாவளி பட்சண டிப்ஸ்...
Updated on
1 min read

ஒரு கப் குலோப் ஜாமீன் மாவுடன் அதே அளவில் சிறிதளவு கேசரி பவுடர் கலந்து,  கட்டியில்லாமல் கரைத்து இரண்டு பங்கு சர்க்கரை, மூன்று பங்கு நெய் சேர்த்துக் கிளறி முந்திரியை வறுத்து போட்டால்  புதுமையான அல்வா ரெடி.

மிக்ஸரில் கறிவேப்பிலையையும்,  பட்டாணியையும் பொரித்துப் போட்டால் சூப்பராக இருக்கும்.  பட்டாணியை ஊறப் போட்டு உப்புப் போட்டு பாதி வெந்தவுடன் எடுத்து வடி கட்டிவிட வேண்டும். பிறகு இதைப் பொரித்தால் வெடிக்காது. மிக்ஸரில் கரகரவென சுவையோடு இருக்கும்.

ரவாலாடு செய்யும்போது, அதனுடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து நெய்யில் வறுத்துச் சேர்த்து மூன்று டேபிள் ஸ்பூன்பால் பவுடரையும் கலந்து ருசியான ரவாலாடு பிடிக்கலாம்.

பயத்தம் மாவில் லட்டு செய்யும்போது, குலோப் ஜாமீன் மிக்ஸ் நெய் சேர்த்துக் கொண்டால் ருசியும் மணமும் அருமையாக இருக்கும்.

போளி தட்டும்போது, வாழை இலையைத் திருப்பிப் போட்டுத் தட்டினால் போளி சுருங்காது. நன்றாகத் தட்ட வரும்.

மைசூர் பாகிற்காக கடலைப் பருப்பை மாவாக அரைக்கும்போது, சிறிதளவு முந்திரிப் பருப்பையும் கூடச் சேர்த்து அரைத்தால் மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com