வீட்டுக் குறிப்புகள்...

அடைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து, மெல்லிய அடைகளாக வார்க்க வேண்டும். மிதமான புதினா வாசனையில் மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டுக் குறிப்புகள்...


அடைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து, மெல்லிய அடைகளாக வார்க்க வேண்டும். மிதமான புதினா வாசனையில் மிகவும் சுவையாக இருக்கும்.

சாம்பார் செய்ய துவரம் பருப்பு மட்டும் பயன்படுத்தாமல், சம அளவு பாசிப் பருப்பை சேர்த்து பயன்படுத்தினால் சாம்பார் சுவையாக இருக்கும்.

அவலை நீர் சேர்த்து ஊறவைக்கும்போது கொஞ்சம் மோர் சேர்த்துக் கொண்டால் கார அவல் டிஷ் சுவை இரு மடங்காகும். எளிதில் ஜீரணமாகும்.

பாகற்காய் கூட்டு, குழம்பு செய்யும்போது அரை டம்ளர் தேங்காய் பால் சேர்த்து கொண்டால் கசப்புநீங்கும்.

சமைத்த பாத்திரத்தில் இருந்து நேரடியாக உணவை உண்ணக் கூடாது.

தலை பாரமாக இருக்கிறதா? நொச்சி இலையை உப்பு போட்டு வதக்கி, இளஞ்சூட்டுடன் நெற்றியில் புற்றுபோல் போட்டுக் கொண்டால், உடனே சரியாகிவிடும்.

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு மார்புச் சளி கட்டிக் கொள்ளும். இதற்கு துளசி கஷாயம் கொடுத்தால் ஆரோக்கியம் அடையலாம்.

பாதாம், பிஸ்தா போன்றவற்றை பிளாஸ்டிக்  டப்பிகளில் போட்டு வைப்பதற்குப் பதிலாக, கண்ணாடி ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து குலுக்கி வைத்தால் நீண்ட நாள்களுக்குத் தடித்து போகாது.

தொகுப்பு : உ.ராமநாதன், ஆர்.கே.லிங்கேசன், பத்மஜா, அ.ப.ஜெயபால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com