தேவையானவை:
ரவை 1 கிண்ணம்
தேங்காய் பால் 2 கிண்ணம்
பெரிய வெங்காயம்1
பச்சை மிளகாய் 2
இஞ்சி, பூண்டு விழுது1 தேக்கரண்டி
புதினா இலைகள்10
மல்லித்தழை சிறிது
எலுமிச்சம்பழச் சாறு 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
நெய் 2 தேக்கரண்டி
தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா 1
எண்ணெய் 2 மேசைக் கரண்டி
செய்முறை:
முதலில் நெய்யைக் காயவைத்து, ரவையை வறுத்துத் தனியே வைத்துகொள்ளுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பின்னர், தேங்காய்ப் பாலை ஊற்றி, அத்துடன் ஒரு கிண்ணம் தண்ணீரையும் தேவையான உப்பையும் சேர்த்துக் கலக்குங்கள். தேங்காய்ப் பால் நன்கு கொதிக்கும்போது, வறுத்து வைத்துள்ள ரவை, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, மூடி வைத்துவிட்டு தீயை குறையுங்கள். பத்து நிமிடம் நன்கு வேகவிட்டு இறக்குங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு : ராகுல் காந்தி

ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக்கொடி! கனிமொழி எம்.பி. வேண்டுகோள்! | DMK

இமயமலையில் தொலைந்த அணுசக்தி சாதனம்... மிஸ்டர் எக்ஸ் படத்தின் முன்னோட்ட விடியோ!

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


