பாட்டி வைத்தியம்..

குழந்தைகளுக்கு சாம்பிராணி போடும்போது, சிறிது ஓமம் ஒரு சிட்டிகை அளவு நெருப்பில் சேர்க்கவும்.
பாட்டி வைத்தியம்..
Updated on
1 min read


குழந்தைகளுக்கு சாம்பிராணி போடும்போது, சிறிது ஓமம் ஒரு சிட்டிகை அளவு நெருப்பில் சேர்க்கவும்.

உப்புடன் வாழைப்பழத்தைக் கலந்து பிசைந்து உண்டால் சீதபேதி குணமாகும்.

கண் எரிச்சல் உண்டாகும்போது, நன்றாகப் பழுத்த வாழைப் பழத்தை பிசைந்து மோரில் பத்து நிமிடங்கள் ஊறவிட்டு அருந்தினால் உடனடியாக குணம் தெரியும்.

சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் காய்ச்சிய பாலை ஆற்றி வெதுவெதுப்பாகக் குடித்தால் இருமல் நீங்கும்.

சாம்பிராணிக்குப் பதிலாக பூண்டு தோலைப் பயன்படுத்தி சாம்பிராணி போட்டால் இந்தப் புகை மூக்கு வழியாக நுரையீரலுக்குச் சென்று கபத்தை அறுக்கும்.

நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலின் அடைப்புகள் நீங்கி வியர்வை நன்கு வெளியேறுகிறது.  இதனால் சிறுநீரகத்துக்குப் பளு குறைகிறது. ஈரல் பாதிக்கப்படாமல் காக்கப்படுகிறது.

தினமும் நடைப்பயிற்சி நல்லது. பெண்கள் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்தால் வலிப்பு, சில வகை நோய்கள் நெருங்காது.  வீட்டு வேலைகள் செய்தல், அன்றாடம் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி ஆகியவையும் நன்மை தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com