/

வரகரிசி புலாவ்

வரகரிசியை கழுவி, ஒன்றுக்கு 1  கிண்ணம் வீதம் தண்ணீர் சேர்த்து உதிரியாக வடிக்கவும்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

லோ. சித்ரா

தேவையானவை:

வரகரிசி- 2 கிண்ணம்
பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு- 2 கிண்ணம் (நறுக்கியது)
கிரேவி:
தக்காளி-1
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
கொத்துமல்லி- சிறிதளவு
கரம் மசாலா பவுடர்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய், நெய்- கால் கிண்ணம்
தாளிதம் செய்ய:
ஏலக்காய், கிராம்பு, பட்டை, சீரகம், மிளகு- சிறிதளவு

செய்முறை:

வரகரிசியை கழுவி, ஒன்றுக்கு 1  கிண்ணம் வீதம் தண்ணீர் சேர்த்து உதிரியாக வடிக்கவும். தக்காளி, வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது, கொத்துமல்லி, கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சீரகம், கிராம்பு, பட்டை, சீரகம், மிளகு தாளிதம் செய்து அரைத்த மசாலா விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கெட்டிப்பட்டவுடன் உதிரியாக வடித்த வரகரிசி சாதத்துடன் கலந்து, தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.