பெரும்பாலான பெண்கள் முக அழகு கவனிப்பைப் போல, பாதங்களுக்கு கவனம் தருவதில்லை. வீட்டுக்குள் நுழையும்போது, நமது கால்களையும் பாதங்களையும் சுத்தமாகக் கழுவிய பிறகு செல்லும் பழக்கத்தைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் இதனால் பாதம் எப்போதும் சுத்தமாக இருப்பதோடு, பார்ப்பதற்கு அழகாய் இருக்கும்.
குளிக்கும்போது கால்கள், பாதங்கள், விரல்களில் உள்ள அழுக்குகளைத் தேய்த்து எடுத்தவுடன் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் கால்கள் பளபளவென்று அழகாய் இருக்கும்.
பாதத்துக்கு அதற்கான கீரிமைத் தடவி சிறிதுநேரம் கழித்து பின்னர் துடைத்து இரண்டு சொட்டு கிளிசரின் விட்டுவந்தால், பாதங்களின் மிருதுத்தன்மை பெறும்.
இரவில் தூங்கச் செல்லும்போது, இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகளை எடுத்துகொண்டு ஒன்றில் பாதி அளவுக்கு மிதமான சுடு நீரையும், மற்றொன்றில் குளிர்ந்த நீரையும் எடுத்துகொள்ளுங்கள், முதலில் ஐந்து நிமிடம் சுடுநீரில் கால்களை வைத்து எடுங்கள். பின்னர், குளிர்ந்த நீரில் கால்களை வைத்து எடுங்கள். இவ்வாறு செய்தால் கால் பாதத்தில் ஏற்பட்ட சோர்வு நீங்கும். இதன்பின்னர், இரண்டு தேக்கரண்டி பன்னீர், ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, இரண்டு தேக்கரண்டி கிளிசரின் மூன்றையும் கலந்து பாதத்தில் தேய்த்து படுத்துகொள்ளவும். காலையில் கால்கள் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதோடு, மிருதுத்தன்மையும் வசீகரமும் ஏற்படும்.
கால்களின் விரல்களின் இடுக்குகளில் ஈரம் இல்லாமல் பார்த்துகொள்ளவும். அப்படியிருந்தால் சொரி ஏற்பட வாய்ப்புண்டு.
மசாஜ் கிரீம் அல்லது மாயில் சரைசிங் லோஷன் கொண்டு பாதத்தில் இருந்து கணுக்கால் வரை மசாஜ் செய்து வருவது பாதங்களுக்கு அழகு சேர்க்கும்.
காலில் சேற்றுப்புண் மீது வடித்த கஞ்சியோடு மஞ்சள் பொடியை குழப்பி சூடுபடுத்தித் தடவ குணமாகும்.
கால் பாதத்தின் கீழ்ப் பகுதியில் மருதாணியால் புரட்டினால் கால் கீறல் ஏற்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களித்த பேருந்து ஓட்டுநர்! பொறுமையாகக் காத்திருந்த பயணிகள்!
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


