பெண் டிரக் ஓட்டுநர்! 

மணந்தால் டிரக் ஓட்டுநரையே மணப்பேன்''  என்று சபதமிட்டு, அதை நிறைவேற்றியும்விட்டார் சர்வதேச ஓட்டுநர் லைசென்ஸ் பெற்ற இளம்பெண் டெலிசா டேவிஸ்.
பெண் டிரக் ஓட்டுநர்! 
Updated on
1 min read

"மணந்தால் டிரக் ஓட்டுநரையே மணப்பேன்''  என்று சபதமிட்டு, அதை நிறைவேற்றியும்விட்டார் சர்வதேச ஓட்டுநர் லைசென்ஸ் பெற்ற இளம்பெண் டெலிசா டேவிஸ்.

யுனைடெட்  அரபு எமிரேட்ஸில் ஆபத்தான பொருள்களைஏற்றிச் செல்லும் டிரக் ஓட்டுநராக  அவர் பணிபுரிகிறார். வயது இருபத்து நான்கு ஆகிறது.

அவர் கூறியதாவது:

""என் அப்பா டேங்கர் டிரக் ஓட்டுநர்.  இதனால் எனக்கு சிறு வயதிலிருந்தே டிரக் ஓட்டுவதில் ஈடுபாடு உண்டு.  10 வயதிலிருந்து அவருடன் செல்லத் தொடங்கினேன்.

அப்போது ஒரு சபதமும் எடுத்தேன்.  திருமணம் செய்துகொண்டால், ஒரு டிரக் ஓட்டுநரையே திருமணம் செய்துகொள்வது என்பதுதான். இதன்படியே திருமணத் தரகர்கள் வாயிலாகத் தேடி, ஹென்சன் என்ற ஓட்டுநரையே திருமணம் செய்துகொண்டேன்.  இந்தத் திருமணத்துக்காக,  டெலிசாவும், ஹென்சனும் ஒரே டிரக்கில் திருமண மண்டபத்து வந்தோம்'' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com