கறைகளை நீக்க யோசனைகள்!

துணிகளில் காபி, டீ போன்ற கறைகள் அதிகமாக இருந்தால், அம்மோனியாவை உபயோகித்து கறையை எடுக்கலாம். 
கறைகளை நீக்க யோசனைகள்!

-துணிகளில் காபி, டீ போன்ற கறைகள் அதிகமாக இருந்தால், அம்மோனியாவை உபயோகித்து கறையை எடுக்கலாம். 

-தார்க் கறை பட்ட இடத்தில் சிறிதளவு மண்ணெண்ணெய் விட்டு நன்றாகத் தேய்க்கவும். சில நிமிடங்கள் கழித்து சோப்பு போட்டு, துவைத்து அலசினால் கறை நீங்கிவிடும்.

பெயிண்ட் கறை பட்ட இடத்தில் டர்பன்டைனைக் கொண்டு தேய்த்துச் சற்று நேரம் ஊறவைத்து, பின்னர் சோப்புப் போட்டு அலசினால் கறை நீங்கிவிடும்.

-சாக்லேட், சூயிங்கம் போன்றவை துணிகளில் ஓட்டிக் கொண்டிருந்தால் கத்தியில் வறண்ட பகுதியை சுரண்டி எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து அலசி எடுத்தால் கறை நீங்கிவிடும்.

-பால், சென்ட் கறைகளை தண்ணீரில் பலமுறை கசக்கி, கிளிசரினை அதன் மீது தடவி அலசி எடுத்தால் நீங்கிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com