47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மிளகாய் குழம்பு

வெந்தயம், கடுகு சேர்த்து வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தைப் பொரித்து எடுத்து, எல்லாம் நன்கு பொடி செய்யவும்.

News image
Updated On :29 ஜனவரி 2023, 12:30 am

DIN

தேவையான பொருள்கள்:

பச்சை மிளகாய்-15
கெட்டி புளிக்கரைசல்- 1 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
வெல்லம்- 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 1 மேசைக் கரண்டி
கருவேப்பிலை- 1 ஆர்க்கு
வெந்தயம், கடுகு- தலா  அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
கட்டிப் பெருங்காயம்- சிறு துண்டு


செய்முறை: 

வெந்தயம், கடுகு சேர்த்து வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தைப் பொரித்து எடுத்து, எல்லாம் நன்கு பொடி செய்யவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றவும். பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கெட்டி புளிக்கரைசல், உப்பு, கருவேப்பிலை, வெல்லம், மஞ்சள் தூள், வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகித்தால், பல மாதங்களானாலும் கெடாது.

ந.கிருஷ்ணவேணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.