ஸ்ட்ஃப்டு மிளகாய்
வெறும் கடாயில் கடுகு, சோம்பை தனித்தனியாக வறுக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பொடிக்கவும்.


தேவையான பொருள்கள்:
பச்சை மிளகாய்-25
உப்பு- தேவையான அளவு
கடுகு, சோம்பு- தலா 1 தேக்கரண்டி
எலுமிச்சை- 2
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
செய்முறை:
வெறும் கடாயில் கடுகு, சோம்பை தனித்தனியாக வறுக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பொடிக்கவும். காம்புடன் உள்ள மிளகாய்களை நுனியில் கத்தியால் இரண்டாகப் பிளக்கவும். தயாராக உள்ள பொடியை உள்ளே சேர்க்கவும். இதேபோன்று, எல்லா மிளகாய்களிலும் செய்யவும். எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கவும். குலுக்கிவிட்டு, 4 நாள்களுக்குப் பிறகு உபயோகிக்கவும். வட இந்தியர்கள் சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள அதிகம் பயன்படுத்துவர். ஊறிவிட்டால் எத்தனை நாள்களானாலும் கெடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...