

தேவையான பொருள்கள்:
சுரைக்காய் 1
புழுங்கல் அரிசி 1 கிண்ணம்
பச்சை மிளகாய் 4
இஞ்சி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
பெரிய வெங்காயம் 1
கொத்தமல்லி இலை சிறிதளவு
செய்முறை :
சுரைக்காயின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். அரிசியை நன்றாக அலம்பி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி, சுரைக்காய், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து, வெங்காயத்தை நறுக்கி போட்டு, கொத்தமல்லியை சேர்த்து தோசையை வார்த்து சாப்பிடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.