எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வீட்டுக் குறிப்புகள்...

பிரம்புச் சாமான்களை எலுமிச்சைச் சாறு கொண்டு தேய்த்து துடைத்தால் அவை புதுப்பொலிவு பெறும்.

News image
Updated On :5 மார்ச் 2023, 12:30 am

பிரம்புச் சாமான்களை எலுமிச்சைச் சாறு கொண்டு தேய்த்து துடைத்தால் அவை புதுப்பொலிவு பெறும்.

ஆடையில் சுயிங்கம் ஒட்டிக் கொண்டால், ஐஸ் கட்டி மூலம் அங்கு தேய்த்தால் போதும். எளிதில் வந்துவிடும்.

சுவர்களில் உள்ள ஓட்டைகளைப் பற்பசையைக் கொண்டு அடைக்கலாம். பற்பசை நன்கு காய்ந்தவுடன் சுவரின் நிறத்தையே அந்தப் பற்பசையின் மீது அடித்தால் ஓட்டையைத் தேடினாலும் கிடையாது.

துணியில் மருதாணிக் கறை பட்டிருந்தால், அதை வெதுவெதுப்பான பாலில் அரைமணி நேரம் ஊற வைத்துப் பின்னர் சோப்பு போட்டு அலசுங்கள். சரியாகிவிடும்.

அவசரத்துக்கு வெள்ளியினாலான பொருள்களைப் பளபளப்பாக்க வேண்டுமானால் கொஞ்சம் பற்பசையை தேய்த்து துணியால் துடைத்தால்  போதும். கறுப்பு மறைந்துவிடும்.

பழங்களுடன் ஸ்டார்ச் அதிகமுள்ள உணவு (உருளைக்கிழங்கு போன்றவற்றை) உண்டால் இரண்டுக்கும் உள்ள ஜீரணிக்கும் நேர வித்தியாசத்தால் பாதிப்புகள் உண்டாகும்.

மாமிசத்தையும் பாலையும் சேர்த்து உண்ணக் கூடாது. மாமிசம் சூட்டை அதிகரிக்கும். உணவு, பால் உடலை குளிர்விக்கும். இரண்டும் பொருந்தாதவை. ஜீரண அக்னி பாதிக்கப்படும்.

முலாம் பழத்தையும் பாலையும் சேர்த்து உண்ணக் கூடாது.  இரண்டும் குளிர்ச்சியானவை. ஆனால், பால் மலமிளக்கி. முலாம்பழம் சிறுநீரைப் பெருக்கும். பால் ஜீரணிக்க நேரமாகும். வயிற்றில் திரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.