பட்சணம் டிப்ஸ்

குலோப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி மாவை பிசைந்து உருட்டி வைக்கும்போது ஒரு குச்சியால் நடுவில் ஒரு துளை போட்டால் மாவு உள்ளே நன்றாக வெந்து விடும் ஜாமூன் கருகவும் செய்யாது.
பட்சணம் டிப்ஸ்

குலோப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி மாவை பிசைந்து உருட்டி வைக்கும்போது ஒரு குச்சியால் நடுவில் ஒரு துளை போட்டால் மாவு உள்ளே நன்றாக வெந்து விடும் ஜாமூன் கருகவும் செய்யாது.

இரண்டு பங்கு பாசிப்பருப்பு,  ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் சுவை சூப்பரோ சூப்பர்.

பர்பி மைசூர் பாகு போன்ற ஸ்வீட்டுகள் செய்யும்பொழுது அவற்றின் úஜ்மலே அலங்காரமாக வைக்கிற பாதாம்,  பிஸ்தா,  முந்திரி போன்றவை சரியாக ஒட்டிக்கொள்ளாமல் கீழே விழுந்து விடுகிறதா நெய் தடவிய தட்டில் இவற்றை தூவி பிறகு ஸ்வீட் கலவையை இவற்றின் மேலே கொட்டி ஆறவிட்டு துண்டுகள் போட்டால் இவை நன்றாக ஒட்டிக் கொள்ளும் பிறகு ஸ்வீட் துண்டுகளை எடுத்து கீழ்பாகம் மேலே வரும்படி திருப்பி அடுக்கி வைக்கலாம்.

வெண்முறுக்கு அல்லது தேன்குழல் செய்யும்போது ஒரு டம்ளர் அரிசி மாவு, அரை டம்ளர் பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றுடன் தேவையான அளவு புளித்த மோர் உப்பு காரம் சேர்த்து பிசைந்து பிழிந்தால் லேசான புளிப்புச் சுவையுடன் கரகரப்பான முறுக்கு அருமையாக இருக்கும்.

பயத்தமாவில் லட்டு செய்யும் போது குலோப்ஜாமூன் மிக்ஸ் நெய் சேர்த்துக் கொண்டால் ருசியும் மணமும் சூப்பர்.

ரவா உருண்டை செய்யும் பொழுது சிறிதளவு பால் பவுடர் சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

பாதுஷா செய்யப் போகிறீர்களா? சர்க்கரையை இரட்டைக் கம்பு பாகு வரும் வரை காய்ச்சியதும் அரை மூடி எலுமிச்சம்பழத்தை பிழிந்து கொள்ளுங்கள் இதனால் பாகு திரவ நிலையில் இருக்கும் பொறித்த எல்லா பாதுஷாக்களையும் சுலபமாக பாகில் ஊற வைக்கலாம்.

பாதுஷா செய்த பின்பு அதன் மீது பூஸ்ட் அல்லது   போன் விட்டாவை திக்காக கரைத்து ஆங்காங்கே தெளித்தால் வித்தியாசமான டிசைனில் பாதுஷா ரெடி.

வெல்லப்பாகு செய்னி பாகு காய்ச்சும் போது பாகுபதம் வந்தவுடன் எலுமிச்சை பழச்சாறு சில துளிகள் விட்டால் பாகு முற்றாது .

தீபாவளிக்கு முடிந்தவரை சர்க்கரையை தவிர்த்து வெல்லம் அல்லது பனைவெல்லத்தில் இனிப்புகள் செய்தால் இரும்பு சத்துடன் கூடிய பலகாரம் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com