சமையல் குறிப்புகள்...

ரைஸ் குக்கரில் வைத்த சாதம் குழைந்துவிட்டால் அதன் மேல் ஒரு ரொட்டியை வைத்து மேலும் இரண்டு நிமிடங்கள் சூடுபடுத்தினால், ரொட்டி அதிகப்படியான ஈரப் பதத்தை உறிஞ்சி, சாதத்தை பொலபொலவென்று ஆகிவிடும்.
சமையல் குறிப்புகள்...


ரைஸ் குக்கரில் வைத்த சாதம் குழைந்துவிட்டால் அதன் மேல் ஒரு ரொட்டியை வைத்து மேலும் இரண்டு நிமிடங்கள் சூடுபடுத்தினால், ரொட்டி அதிகப்படியான ஈரப் பதத்தை உறிஞ்சி, சாதத்தை பொலபொலவென்று ஆகிவிடும்.

பொறித்த அப்பளம் காகிதம் போல் ஆகிவிட்டால், அதனை மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க மொறுமொறு என நன்றாக இருக்கும்.

தட்டை செய்யும்போது கடலைப் பருப்புக்கு பதிலாக ஒரு டம்ளர் கொள்ளு பயிறை ஊற வைத்து அரைத்து தட்டை செய்தால் சுவையாக இருக்கும்.

வாழைக்காயை பயன்படுத்தியதும் அதன் தோலை வீணாக்காமல் வேக வைத்து துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் அல்சர் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும்.

அடை செய்யும் போது பச்சரிசிக்கு பதிலாக  கோதுமை ரவையை போட்டு ஊறவைத்து செய்தால் தனி சுவையுடன் இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.

-செளமியா சுப்ரமணியன்,
பல்லாவரம்.

சூப் செய்யும்போது ஒரு துண்டு வெங்காயம் சிறிது கடுகை நெய்யில் வறுத்து சேர்க்க, சூப் வாசனையுடன் இருக்கும்.

வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது, அரை தேக்கரண்டி தயிர் சேர்த்தால் நெய் கமகமவென்று இருக்கும்.

உப்பு ஜாடியில் ஈரம் கசிந்தால், ஜாடிக்குள் சிறிது அரிசியை உப்புடன் கலந்து வைத்தால் ஈரக்கசிவு இருக்காது.

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com