வீட்டுக் குறிப்புகள்...

வீட்டு அறைகளில் துர்நாற்றம் வீசினால், சில நெருப்புக் குச்சிகளைக்  கொளுத்தி கையில் பிடித்துகொண்டால் போதும். துர்நாற்றம் போய்விடும்.
வீட்டுக் குறிப்புகள்...

வீட்டு அறைகளில் துர்நாற்றம் வீசினால், சில நெருப்புக் குச்சிகளைக்  கொளுத்தி கையில் பிடித்துகொண்டால் போதும். துர்நாற்றம் போய்விடும்.

ஸ்க்ரூடிரைவர், ஆணிகள், கத்திரிக்கோல் சாமான்கள் வைத்திருக்கும் டப்பாவில் ஒறு பெரிய கற்பூரவல்லியைப் போட்டு வைத்தால், அந்தச் சாமான்கள் துரு பிடிக்காது.

குக்கரில் ரப்பர் வளையம் தளர்ந்துவிட்டால்  அதை ஃப்ரிட்ஜிலோ, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையிலோ சில நாள்கள் வைத்து உபயோகப்படுத்தினால் பழைய நிலையை போன்று இறுக்கமாகிவிடும்.

சில பெண்களுக்கு நெற்றியில் குங்குமம் இடுவதால், அந்த இடம் கறுப்பாகிவிடும். அந்தத் தழும்பு மறைய அந்த இடத்தில் வில்வ மரக்கட்டையை அரைத்து பூசினால் சரியாகிவிடும்.

சிறிய  கடுகை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்து, அதில் பாத்திரம் தேய்த்தால் கறை மறையும்.

இட்லி, தோசை மாவுப் பாத்திரத்தில் ஓட்டிக் கொண்டிருக்கும் மாவினால் எவர்ஃசில்வர் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரங்கள் பளபளவென்று இருக்கும்.

வெந்தயக் குழம்பு செய்யும்போது இரண்டு சிட்டிகைப் பருப்புப் பொடியை போட்டால் குழம்பு மணமாய் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com