

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி, அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
வயிற்று சதை குறைய சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும். தயிரை தலைக்குத் தேய்த்து ஊறியவுடன் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.
பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்.
மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறி விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.