சுக்கு குழம்பு

முதலில் புளியை ஊற வைத்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பின் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
சுக்கு குழம்பு

தேவையான பொருள்கள்

சுக்கு  ஒரு துண்டு
மிளகு  4  தேக்கரண்டி
வெந்தயம்  2 தேக்கரண்டி
கடுகு  1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு  1 தேக்கரண்டி
புளி  பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்  250 கிராம்
தக்காளி  3
மஞ்சள் தூள்  அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
மிளகாய்த் தூள்  1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு  தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளியை ஊற வைத்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பின் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சுக்கு, மிளகு, வெந்தயத்தை ஒரு வெறும் வாணலியில் போட்டு எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். அதன் பின் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்க வேண்டும்.

பிறகு தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் புளிக்கரைசல் ஊற்றி சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால், அஜீரணத்தைப் போக்கும் சுக்கு குழம்பு தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com