வீட்டுக் குறிப்புகள்...

சமையலறையில் சுவையூட்டும் சில எளிய டிப்ஸ்
வீட்டுக் குறிப்புகள்...

ஒரு மணி நேரம் குளிர்ந்த நீரில் பூண்டை ஊறவைத்து, பிறகு தோலை உரித்தால் எளிதில் உரிந்துவரும்.

 சிறிது சர்க்கரையை பச்சைப்பட்டாணியில் தூவிவிட்டு பிறகு வேக வைத்தால், நிறமும் மாறாது. சுவையும் கூடும்.

 பார்லியையும், கோதுமை மாவையும், சம அளவில் கலந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்.

 எலுமிச்சைச் சாறுடன் சிறிது உப்பு சேர்த்துகொண்டால் சுவை கூடும்.

 காய்கறி சாலட் செய்யும்போது சில பிரட் துண்டுகளைப் போட்டு விட்டால் சாலட் நீர்த்துப் போகாமல் புதுவிதமான சுவையுடன் இருக்கும்.

 வெள்ளரிக்காயில் பஜ்ஜி செய்தால் பஜ்ஜி தனி ருசியோடு இருக்கும்.

 எலுமிச்சை, சாத்துக் குடி போன்ற பழங்களை வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்துப் பிறகு பிழிந்தால் சாறு கூடுதலாகக் கிடைக்கும்.

 பருப்பு வகைகளை வேக வைக்கும்போது, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வேக வைத்தால் நன்றாக வெந்துவிடும்.

பீட்ரூட்டை வேக வைத்தவுடன் அதன் தோலை உரித்தால் சுலபமாக இருக்கும்.

பால் திரிந்து விட்டால், அதை கீழே கொட்டாமல் வெள்ளிப் பாத்திரங்கள், வெள்ளிக் கொலுசுகளை 15 நிமிடங்கள் அதில் ஊறவைத்து, தேய்த்து எடுத்து துணியால் துடைத்து விட்டால் புதிது போல் பளிச்சென்று இருக்கும்.

 சேப்பங்கிழங்கை கத்தியால் ஆங்காங்கே கீறிவிட்டு, அதன்பிறகு வேகவைத்தால், தோலை உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.

சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்த்து தக்காளியை வதக்கினால், சீக்கிரமாக வதங்கும்.

 வத்தக் குழம்பில் ஒரு கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவையும் கூடும்.

 ரவை ஒரு தேக்கரண்டி, பச்சரிசி மாவு ஒரு தேக்கரண்டி கலந்து கோதுமை மாவை கெட்டியாகப் பிசைந்து உடனே தடிமனாக தேய்த்து பூரி செய்தால் உப்பலாக வரும்.

தண்ணீரில் கொஞ்சமாக மோர் கலந்து வாழைப்பூவை நறுக்கி அதில் போட்டு வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

 கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில், கிராம்பை வைக்கவும்.

 கிராம்பு எண்ணெயை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யவும்.

சர்க்கரையுடன் சம அளவு பேக்கிங் சோடாவை கலந்து கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் தூவவும். அதை சாப்பிட்டு கரப்பான் பூச்சிகள் இறந்துவிடும்.

 பிரியாணி இலையை பொடி செய்து கரப்பான் பூச்சிகள் உலாவரும் இடத்தில் தூவலாம். அந்த வாசனைக்கு வராது.

 கோதுமை மாவில், ஃபோரிக் ஆசிட் சேர்த்து பிசைந்த கலவையை சிறு உருண்டைகளாக்கி கரப்பான் பூச்சிகள் உலாவரும் இடங்களில் வைக்கவும். அதை சாப்பிட்டால் கரப்பான் பூச்சிகள் இறந்துவிடும்.

- சௌமியா சுப்ரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com