காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மோர்க்குழம்புப் பொடி

மஞ்சள் தூளைத் தவிர, மேலே சொன்ன அனைத்துப் பொருள்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் இட்டு மஞ்சள் தூள் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்க, சுவையானண தாராஸ் கிச்சன் ஸ்டைலில் மோர்க் குழம்புப் பொடி தயார்.

News image

மோர்க்குழம்புப் பொடி

Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:36 am

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

வரமல்லி, கடலைப் பருப்பு- தலா 10 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி

அரிசி, சீரகம்- தலா 2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல்- 3

பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

மஞ்சள் தூளைத் தவிர, மேலே சொன்ன அனைத்துப் பொருள்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் இட்டு மஞ்சள் தூள் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்க, சுவையானண தாராஸ் கிச்சன் ஸ்டைலில் மோர்க் குழம்புப் பொடி தயார்.

மோர்க் குழம்பு செய்யும்போது, தாளிக்க வேண்டிய பொருள்களைத் தாளித்தவுடன் தேவையான அளவு அதில் தண்ணீர் ஊற்றி இந்தப் பொடியைத் தேவையான அளவு சேர்த்து 10 நிமிடங்கள் லோப்பிளேமில் கொதிக்கவிட்டு, பிறகு கெட்டித் தயிரை, சில பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அடிக்க வேண்டும். பின்னர், வாணலியில் ஊற்றி தேவையான அளவு உப்பைச் சேர்த்து, இரண்டு கொதிவர இறக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் தாளிக்க மோர்க் குழம்பு தயார். எப்போதும் அடித்த தயிரை இறுதியில்தான் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், மோர்க் குழம்பு திரிந்துபோகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.