/

வீட்டைப் பாதுகாக்க...!

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

வீட்டைக் கட்டிப் பார் என்பார்கள். வீட்டை நல்லமுறையில் பராமரித்தால்தான் எப்போதும் புதுப்பொலிவோடு இருக்கும். சில எளிய டிப்ஸ்கள்:

மாதம்தோறும் ஒட்டடை அடிக்க வேண்டும்.

கதவின் கீறல்கள், சப்தமிடுதல், மரம் விரிவடையும்போது கதவு சரிவர மூடாமல் இருப்பது போன்றவை முக்கிய பிரச்னைகள். மழைக்காலங்களில் அதிக அளவில் இருக்கும். கீல்களின் சப்தத்தை நிறுத்த கிரீஸ், தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

உப்பு காகிதத்தைப் பயன்படுத்தி, கதவுகளை அவ்வப்போது தேய்த்து மென்மையாக்கலாம். இதனால் கதவுகள் நன்றாக மூடும்.

மோசமான பிளம்பிங், விரிசல் போன்ற காரணங்களால் சுவர்களில் கறைகள் படியும். இவற்றை அவ்வப்போது சரியாகக்

கவனித்து, தரமான ஸ்டெயின் கிளீனரை பயன்படுத்தி அகற்றலாம்.

வீட்டிலுள்ள தண்ணீர் பைப்புகளில் தண்ணீர் எளிதாக வருவதற்கு சிறிய அளவிலான பில்டர் இணைக்கப்பட்டிருக்கும். உப்புத் தண்ணீரை பயன்படுத்தும்போது, அதில் உப்பு படிந்து தண்ணீர் வரத்து குறையும். அவ்வப்போது பில்டரை கழற்றி சுத்தம் செய்யலாம். குழாய்கள், ஷவர்களை அவ்வப்போது சுத்தம் செய்வதும் நல்லது.

தினசரி, வாரம்தோறும் வழக்கமாகச் சுத்தப்படுத்துவதைப் போன்று, வீட்டு உபயோகப் பொருள்களையையும் சுத்தம் செய்வது நல்லது.

- சௌமியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.