மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடுப்பறை அலப்பறை...

சமையலறையின் சுவாரஸ்ய சம்பவங்கள்!

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 6:30 pm

DIN

""செல்லம்.. சமையல் சுமாராதான் இருக்கு..''

""போங்க. என் தலையெழுத்து. உங்க சமையலை சாப்பிடணும்னு இருக்கு...''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

""உங்க வீட்டுல ஏன் எந்த வேலைக்காரியும் ரொம்ப நாள் இருக்க மாட்டேங்கிறாங்க..?''

""நான்தான் சொன்னேனே ... என் மனைவியோட யாராலும் குப்பை கொட்ட முடியாதுன்னு...''

-வி.சாரதி டேச்சு, சென்னை-5.

""உங்க வீட்டு தென்னை மரத்துல மட்டை எங்க வீட்டுல விழுதே.. பார்த்துங்க..?''

""ஏன். தேங்காய்கள் விழுதே.. அதை சொல்ல மாட்டேங்கிறீங்க..?''

-பர்வதவர்த்தினி, பம்மல்.

""உன் புருஷன் வேலைக்காரியைப் பார்த்து சிரிக்கவே மாட்டேங்குறார். அப்புறம் எதுக்கு அவரை சந்தேகப்படுறே..''

""என்னைப் பார்த்து பயப்படுற மாதியே அவளைப் பார்த்தும் பயப்படுறாரே..''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

""என் மருமக சமையலில் குறை கண்டுபிடிக்கணும்னு நானும் டிரை பண்றேன். ஆனா அது முடியலைடீ..''

""அவ்வளவு பர்ஃபெக்டா செய்துடறாளா..?''

""நீ வேற ஏதாவது செஞ்சாதானே அதுல குறை கண்டுபிடிக்க முடியும்..''

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.