முடக்கற்றான் சப்பாத்தி
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு- அரை கிலோ
முடக்கற்றான் கீரை- 1 கைப்பிடி அளவு
தக்காளி- 1 சிறியது
கேரட்- 1 சிறியது
பச்சை மிளகாய்- 4
பெரிய வெங்காயம்- 1
சீரகம்- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- சிறிதளவு
உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், முடக்கற்றான் கீரை ஆகியவற்றை எண்ணெய்விட்டு பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சீரகம், உப்பு சேர்த்து மிக்சில் போட்டு நன்றாகக் கெட்டியாக அரைத்துகொள்ளவும். அரைத்த விழுதை கோதுமை மாவில் கொட்டி சப்பாத்தி அள்லது பூரி மாவு பதத்துக்கு பிசைந்து, சுட்டால் நன்றாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.