சமையல் பாத்திரங்களின் பயன்கள்..

வீடுகளில் சமைப்பதற்கு இரும்பு, வெண்கலம்,  ஈயம், அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் / எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்கள், மண் பானைகள் என பலவகை பாத்திரங்கள் உள்ளன.  
சமையல் பாத்திரங்களின் பயன்கள்..
Published on
Updated on
1 min read

வீடுகளில் சமைப்பதற்கு இரும்பு, வெண்கலம், ஈயம், அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் / எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்கள், மண் பானைகள் என பலவகை பாத்திரங்கள் உள்ளன. ஆனால் எந்தப் பாத்திரத்தில் சமைத்தால், நமக்கு முழு சத்தும் கிடைக்கும் என தெரிந்து சமைக்க வேண்டும்.

இரும்பு

இரும்புப் பாத்திரத்தில் சமைப்பதால் ஒரே இடத்தில் சூடு பிடிக்காமல் எல்லா இடங்களிலும் சமமாகச் சூடு பரவும். அதிக நேரம் சாப்பாடு சூடாக இருக்கும். அதிலுள்ள இரும்புச் சத்து சாப்பாட்டில் சேருவதால், உடலில் இரும்புச் சத்து சேர்ந்து ரத்தச் சோகையை நோய் வராமல் தடுக்கும்.

ஆனால், இரும்புப் பாத்திரத்தில் வாழைக்காய், துவர்ப்புக் காய்கறிகளை சமைக்கவே கூடாது. அதிலும் துரு பிடித்த இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது மிகவும் ஆபத்தானது.

வெண்கலம்

வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் சோர்வு நீக்கி புத்துணர்ச்சி உண்டாகும். ஆனால், பாத்திரங்கள் பச்சை நிறமாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பச்சை நிறம்படிந்த பாத்திரத்தில் சமைத்தால் சாப்பாடு விஷமாகிவிடும். அதனை தவிர்க்க, வெண்கலப் பாத்திரத்தில் சமைத்தவுடன் அதனை நன்கு கழுவி வெயிலில் காய வைத்து அதன் பிறகே மீண்டும் உபயோகிக்க வேண்டும்.

ஈயம்

ஈய பாத்திரத்தில் ரசம் வைத்து சாப்பிடுவது அலாதி சுவைதான். தற்போது உள்ள ஈய பாத்திரங்களை உண்மையான ஈயம் பூசியதா அல்லது கலப்படமா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

அலுமினியம்

அலுமினியம் நம் உடலில் சேர்வதால், அலுமினியம் உடலில் படிந்து தோல் நோய், சிறுநீரகக் கோளாறு ஏற்படும். ஆனால் அலுமினியத்தில் சமைத்த உடனேயே வேறொரு பாத்திரத்துக்கு உணவை மாற்றிவிட்டால் இந்தக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் / எவர்சில்வர்

எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கும்பொழுது அது “FOOD GRADE STAINLESS STEEL”  வினால் ஆனதா என்பதை மட்டும் சரிபார்த்து வாங்க வேண்டும்.

நான்ஸ்டிக் பாத்திரங்கள்

எண்ணெய் விடாமல் உணவுகளை செய்யலாம் தோசை சுடலாம் என்று பலரும் நான் ஸ்டிக் பாத்திரங்களை வாங்குகிறார்கள். இந்தப் அதிக சூடானால் அதில் உள்ள டெஃப்லான் “பஉஊகஞச”• அதிகமாக சூடாக்கப்படாமல் நான் ஸ்டிக் தவாவில் சாப்பாடு தயாரிக்கலாம். மேலும் நான் ஸ்டிக்கில் கீரல்கள் விழாமல், கோட்டிங் போகாமல் இருக்கும் வரை, அதனை பயன்படுத்துவது சிறந்தது.

மண் பானை

மண் பானையில் சமைப்பதால், மிகுந்த ருசியோடும், உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாகவும் இருக்கும். மண் பானையில் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாது பொருள்கள் நிறைந்துள்ளன. மண்பானையை வாங்கவும் அதில் தினமும் சமைத்து, உண்டால், ஆரோக்கியத்துடன் வாழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com