முதல் பெண்கள்...

வனவிலங்கு புகைப்படக் கலைஞராக இந்தியாவின் முதல் பெண் ராதிகா ராமசாமி
Updated on
1 min read

பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை எனலாம். அந்த வகையில் சாதித்த சில பெண்கள்:

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட வெங்கடாசல புரத்தைச் சேர்ந்த ஐம்பத்து மூன்று வயதான ராதிகா ராமசாமியின் புகைப்படக் கருவிகளில் சிக்காத வனவிலங்குகளே இல்லை. இவர்தான் இந்தியாவின் முதல் வனவிலங்கு பெண் புகைப்படக் கலைஞர் ஆவார்.

இவர் தனது திருமணத்துக்குப் பின்னரே, இயற்கை, வனவிலங்குகள் மீதான ஈர்ப்பால் இந்தத் துறையைத் தேர்வு செய்தார். இவரிடம் பேசியபோது:

""சென்னையில் கணினி அறிவியலில் பொறியியல் படிக்கும்போது, புகைப்படம் எடுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 2004-இல் பரத்பூர் சரணாலயத்துக்குச் சென்றபோது, அங்கு பறவைகளைப் புகைப்படம் எடுத்தேன். பறவைகளைப் படம் பிடிப்பதென்றால், குளிர்காலத்தில் எடுப்பதே சிறந்தது. புகைப்படங்களில் வனவிலங்குகள், பறவைகளின் உணர்வை கொண்டு வருவதே புகைப்படக் கலை.

படம் எடுக்க வனப் பகுதியில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு முறை ஜீப்பில் வனப் பகுதிக்குச் சென்றேன். சாப்பிட்டு கொண்டிருந்தபோது, புலிகள் வந்துவிட்டன. அவற்றை அரைமணி நேரம் படம்பிடித்து, திரும்பி பார்த்தபோது என உணவை குரங்கு சாப்பிட்டுவிட்டது. இதுபோன்ற அனுபவங்கள் நிறைய உள்ளன என்கிறார் ராதிகா ராமசாமி.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட மருங்கூர் ராஜாபூரைச் சேர்ந்த இக்னேசியல் டெலஸ்புளோரா, ராணுவத்தின் செவிலியர் பிரிவில் தமிழகத்தின் முதல் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com