சொத்தைப் பல் வலிக்கு சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து வைத்தால் உடனே வலி குறையும்.
குழந்தைகளின் சளிக்கு வெற்றிலை, கருந்துளசி சாற்றை தேனில் கலந்து கொடுக்க வேண்டும்.
காலில் சுளுக்கு ஏற்பட்டால் சூடாக உப்பு, புளி சேர்த்து பற்று போட வேண்டும்.
பூசணிக்காய் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், நடுக்கம் போன்றவை சரியாகும்.
முடக்கற்றான் இலையை அரிசி மாவுடன் கலந்து தோசை செய்து உண்ண உடம்பு வலி தீரும்.
மஞ்சள், வேப்பிலை சமஅளவு எடுத்து அரைத்து சேற்றுப்புண் மீது பூச விரைவில் குணமாகும்.
எள் பொடி செய்து வெல்லம் கலந்து மூன்று வேளை சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.
மிளகுத் தூளுடன் வெற்றிலை, சீரகம் வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.
தேள் கடிக்கு வெற்றிலையுடன் மிளகு வைத்து மென்று சாப்பிட வேண்டும். கடித்த இடத்தில் சுண்ணாம்பு வைத்தாலும் விஷம் ஏறாது.
தேவையான அளவு மிளகுப் பொடியை வெந்நீரில் கலந்து கரைத்துக் குடித்தால் அஜீரணம் முழுமையாகக் குணமாகும்.
இஞ்சி, மிளகு இரண்டையும் நசுக்கி நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி பாலுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் திடீர் காய்ச்சல் குணமாகும்.
பத்து கிராம் கடுகை பொடித்து, கால் லிட்டர் நீரில் ஊறவைத்து வடிகட்டி கொடுக்க விக்கல் உடனே குணமாகும்.
மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.
சர்க்கரை நோயாளிகள் வெள்ளரிக்காயை அதிகம் உணவில் சேர்த்துகொள்வது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாட்டி வைத்தியம்

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி உறுதி
பீர்க்கங்காய்ப் பொரியல்
பாட்டி வைத்தியம்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

