உலக மக்களை அச்சுறுத்தும் உயர்ரத்த அழுத்த நோயில் இருந்து நம்மை எளிதில் காத்துகொள்ளலாம். எப்படி தெரியுமா?
பசலைக்கீரை, பரங்கிக்காய், கேரட் போன்ற காய்கறிகள், வாழை, பப்பாளி போன்ற பழங்கள் சாப்பிடுவதால், மக்கள் தங்களைத் தற்காத்துகொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ. ஹெச்.ஓ.) கூறுகிறது.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலை மெல்லத் தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலைத் தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பைத் தடுக்க சிறந்த வழி இதுவேயாகும்.
-ஏ.எஸ்.ஜி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.