தேவையான பொருள்கள்:
முந்திரிப் பருப்பு- 1 டம்ளர்
சர்க்கரை- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்
செய்முறை:
முந்திரிப்பருப்புகளைச் சுடு தண்ணீரில் அரை மணி நேரத்துக்கு ஊற விடவும். மின்னரைப்பானில் முந்திரிப் பருப்புகளை விழுதாக அரைக்கவும். மிதமான தீயில் வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் சர்க்கரையைச் சேர்க்கவும். மிதமான தீயில் கலவையைக் கிளறிக் கொண்டே வரவும். கெட்டியான பதத்தின்போது, நெய்யை விட்டுக் கிளறி நெய் தடவின தாம்பாளத்தில் மாற்றிக் கொட்டவும்,சமப்படுத்தி வில்லைகள் போடவும். சுவையான முந்திரிப்பருப்பு கேக் தயார். தோல் நீக்கி ஊற வைத்தப் பாதாம்பருப்பு அரை கப், ஊற வைத்த முந்திரிப்பருப்பு அரை கப் சேர்த்துப் பாதாம்-முந்திரி பர்பி செய்யலாம்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.