பாகற்காய் - பட்டாணி தொக்கு
தேவையான பொருள்கள்:
பாகற்காய்- 200 கிராம்
பட்டாணி- 100 கிராம் (வேகவைத்தது )
தக்காளி -2 (நறுக்கியது )
பெரிய வெங்காயம் -1(நறுக்கியது )
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
புளி -சிறிது
வெல்லம் -1/4 கிலோ
கசகசா ,துவரம் பருப்பு, அரிசி -தலா 1 தேக்கரண்டி
உப்பு , எண்ணெய்- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
புளியை நீரில் ஊற வைக்கவும். பின்னர், ஒரு வாணலியில் கசகசா, துவரம் பருப்பு, அரிசி போன்றவற்றை வறுத்து அதை மிக்ஸியில் நீர் சேர்த்துஅரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதில் பாகற்காய் , பட்டாணியை சேர்த்து வதக்கிவிட வேண்டும். தொடர்ந்து தக்காளியைச் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கிஅதில் புளி தண்ணீரை சேர்க்கவும்.
வாணலியை ஒரு தட்டு வைத்து மூடி கொதிக்க விட வேண்டும். அதில் சிறிது வெல்லம் சேர்த்து தொக்கு பதம் வரும்போது போது அடுப்பை நிறுத்தி விட வேண்டும். சுவையான தொக்கு தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.