பாட்டி வைத்தியம்...

நெய்யுடன் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
பாட்டி வைத்தியம்...
Published on
Updated on
1 min read

நெய்யுடன் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

கீழாநெல்லி வயோதிகக் குறைபாடுகளை நீக்கும்.

பாதாம் பருப்பு கண் பார்வையை மேம்படுத்தும்.

நாயுருவி இலை தேமல், படையைக் குணமாக்கும்.

திரிகடுகப் பொடி மூச்சுத்திணறலைக் குணமாக்கும்.

சிறுகுறிஞ்சா வேரின் பொடி கஷாயம் காய்ச்சலைக் குணமாக்கும்.

பாகல் இலைச்சாறு வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும்.

மகிழம்பட்டை கஷாயம் வாய்ப்புண்களைக் குணமாக்கும்.

துளசி இலை இதய நோயைப் போக்கும்.

நத்தைச் சூரி இலைச்சாறு சளியைப் போக்கும்.

நன்னாரி வேர் ஊறவைத்தத் தண்ணீர் நீரிழிவு நோயைக் குணமாக்கும்.

மகிழம்பூ கஷாயம் உடலை வலிமையாக்கும்.

சுண்டைக்காய் கபத்தைப் போக்கும்.

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

ஆவாரம் பூவை மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், சிறுநீர் கடுப்பு நீங்கும்.

-உ.ராமநாதன், நாகர்கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com