சக்கரவர்த்தி
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரத்தில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகத்தில், இந்தியப் பெண் விண்வெளி விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் சேலை, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட விமானப் போக்குவரத்து, விண்வெளி ஆய்வு தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்கப் பொருள்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் செவ்வாய்கிரகப் பயணத் திட்டத்தின் (மங்கள்யான்) மிக முக்கியமான தருணத்தின்போது (நவம்பர் 30, 2013) நந்தினி ஹரிநாத் இந்தச் சேலையை அணிந்திருந்தார். இந்தச் சேலையை 'நேர்த்தியான வேலைப்பாடுகளுடன்கூடிய சிவப்பு, நீலநிறச் சேலை' என்று விவரித்துள்ளதுடன், அது அணிவிக்கப்பட்ட ஒரு மாதிரி உருவத்தின் புகைப்படங்களையும் காணொலிகளையும் அருங்காட்சியக நிர்வாகம் பகிர்ந்துள்ளது.
இஸ்ரோவின் 'ராக்கெட் பெண்கள்' என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவரான நந்தினி ஹரிநாத், இந்திய விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைய உதவினார். விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து வெற்றிகரமாக வெளியேறி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்தைத் தொடங்கிய அந்த நாளில், நந்தினி ஹரிநாத் பணிக்குச் செல்லும்போது இந்தச் சேலையை அணிந்திருந்தார். பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்தச் சேலையை இடம்பெறச் செய்துள்ளனர்.
ராக்கெட் விஞ்ஞானியாகவும், செவ்வாய் கிரகப் பயணத் திட்டத் துணை செயல்பாட்டு இயக்குநராகவும், திட்டமிடல் - செயல்பாடுகளிலும் நந்தினி ஹரிநாத் முக்கியப் பங்காற்றினார். இவர் நாட்டின் முதல் கோள்களுக்கு இடையிலான விண்வெளிப் பயணத் திட்டத்திலும் பங்காற்றியவர்.
இந்தியாவின் செவ்வாய் கிரகப் பயணத் திட்டம் 2014-இல் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது. இதன் மூலம் 'சிவப்புக் கிரகம்' என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடாகவும், உலகின் நான்காவது நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
தனது முதல் முயற்சியிலேயே இச்சாதனையை நிகழ்த்தியதற்காக இந்தியாவின் இந்தத் திட்டம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் ஆறு முதல் 10 மாதங்கள் வரை செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம், எதிர்பார்ப்புகளைத் தாண்டி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டது.
நந்தினி ஹரிநாத்தின் தாய் கணித ஆசிரியராகவும், தந்தை பொறியாளராகவும் பணியாற்றினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு, இவர் பொறியியலில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளை முடித்தார். இருபது ஆண்டுகளுக்கு மேலான தனது பணிக்காலத்தில் நந்தினி ஹரிநாத் இஸ்ரோவின் 14-க்கும் மேற்பட்ட விண்வெளிப் பயணத் திட்டங்களில் பங்காற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் கோட்டத்தில் மகளிா் பயணத் திட்டத்தில் தினமும் 8.84 லட்சம் போ் பயன்

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: கணவா் கைது

9.8.1976: செவ்வாய் மண்ணில் உயிரின அறிகுறி - வைகிங் தகவல்

21.7.1976: செவ்வாயில் யு.எஸ். விண்வெளி கலம் இறங்கியது
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



