

தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1 கிண்ணம்
கொள்ளு - 1/4 கிண்ணம்
உப்பு - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தண்ணீர் - 4 டம்ளர்
நெய் - 1 மேஜை கரண்டி
மிளகு - 1/4 மேஜை கரண்டி
சீரகம் - 1/4 மேஜை கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரி - 10
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, கொள்ளு எடுத்து வறுத்து நன்றாக களைந்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர்விட்டு, குக்கரில் வைத்து, குழைய வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரியை தாளித்து பொங்கலில் சேர்க்கவும். மணக்கும் கொள்ளுப் பொங்கல் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.