

குளிர்காலத்தில் சோப்பு பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். தோலில் எண்ணெய்த் தன்மை குறைந்து போய் விடுவதால், சோப்பை பயன்படுத்தினால் வறட்சி தோன்றும். இதற்குப் பதிலாக கடலை மாவு அல்லது சிறுபயிறு தூளைப் பயன்படுத்தலாம்.
குளிர் காலத்தில் உடலில் ரத்த ஓட்டம் குறையும். எனவே, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை லேசாகச் சூடாக்கி, உடலில் தேய்த்து, சிறிது நேரத்துக்குப் பின்னர் இளம்சூடான நீரில் குளிக்கலாம். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
வெயில் காலத்தில் சன் ஸ்கின் லோஷன் பயன்படுத்துவதைப் போல், குளிர்காலத்தில் மாய்ஸ்சரைசிங் கிரீம் பயன்படுத்தினால் தோலின் பராமரிப்புக்கு உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.