இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

வீட்டுக் குறிப்புகள்...

ஜவ்வரிசியை சாதம் போல் வேக வைத்து, மோரில் கரைத்து உப்புப் போட்டு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றுவலியும் இருக்காது.

News image
Updated On :14 ஜூன் 2026, 4:05 am IST

ஜவ்வரிசியை சாதம் போல் வேக வைத்து, மோரில் கரைத்து உப்புப் போட்டு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றுவலியும் இருக்காது.

தேங்காய்ச் சாதம் செய்யும்போது, அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப் பொடி செய்து கலந்தால், சாதம் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்துக் களைந்துவிட்டு வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்தால் விரைவில் வெந்துவிடும். மணமும் தூக்கலாக இருக்கும்.

-அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

பச்சைப்பயறு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தொடர்ந்து பச்சைப் பயறை உணவில் சேர்த்தால், ஊட்டச்சத்துகளைப் பெறமுடியும்.

பயத்தமாவுடன் உளுந்து மாவைச் சேர்த்து, தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்னைகளும் தீரும். முடியும் நன்கு வளரும்.

பயத்தம் பருப்பை வேக வைத்து உண்பது நோயாளிகளுக்கும், வலுவற்றவர்களுக்கும் நல்லது.

பாலையும் பழங்களையும் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. நெய், தேன் இரண்டையும் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. மருந்து உள்கொள்ளும்போது, அகத்திக்கீரையைச் சாப்பிடக் கூடாது.

வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி தயிர், வெல்லம் கலந்து சாப்பிட்டு வர தொண்டை வலி நீங்கும். வெங்காயச்சாற்றை நீராகாரத்துடன் சேர்த்துக் குடித்தால், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயச் சாற்றை மோருடன் கலக்கிக் குடித்து வர இருமல் குணமாகும்.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.