சட்னி, சாம்பார், ரசம், ஊறுகாய் என அனைத்திலும் பயன்படுத்தப்படும் பூண்டு, சமையல் கூடங்களில் அத்தியாவசியப் பொருளாக உள்ளது. இந்தச் சிறப்புவாய்ந்த பூண்டுகள் நாடு முழுவதும் விவசாயம் செய்யப்பட்டாலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்டசூர் என்ற நகரத்துக்கு 'பூண்டு நகரம்' என்ற சிறப்புப் பெயர் உண்டு.
இங்குள்ள விவசாயிகளுக்கு பூண்டு உற்பத்தியே முக்கிய வருமான ஆதாரமாகும். இங்கு உற்பத்தியாகும் பூண்டுகளின் சுவை, நல்ல தரமான பற்கள் போன்றவை நீண்ட நாள் சேமித்து வைக்கும் தன்மைக்கும் பெயர் போனது. இந்தப் பகுதியின் மண்ணும் கால நிலையும் அதன் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளதால், இங்கு உற்பத்தியாகும் பூண்டுகளை நீண்ட காலத்துக்குச் சேமிக்கவும் முடிகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 'ஒரு மாவட்டத்துக்கு ஒரு பொருள்' என்ற அடிப்படையில் மண்டசூர் மாவட்டத்தில் பூண்டு முக்கியப் பொருளாகத் தேர்வு செய்யப்பட்டு விசேஷ கவனம் செலுத்தப்படுகிறது.
பூண்டுத் தூள், பூண்டு எண்ணெய், பூண்டு ஊறுகாய், உலர்த்தப்பட்ட செதில்கள் போன்றவையாகத் தயாரிக்கப்பட்டு இங்கிருந்து நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

