பாசிப்பருப்பு காரச் சுண்டல்
பாசிப்பருப்பை நன்றாக களைந்து பத்து நிமிடம் ஊற வைத்து பிறகு நன்றாக சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு மூடி வைத்தால் ஐந்து நிமிடத்தில் வெந்து விடும்.
பாசிப்பருப்பு காரச் சுண்டல்
தேவையானவை :
பாசிப்பருப்பு -250 கிராம்
மிளகாய் வற்றல் -நான்கு
கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள்- தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு ஆர்க்
தேங்காய்த் துருவல்- ஒரு மேஜைக்கரண்டி
உப்பு ,எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை நன்றாக களைந்து பத்து நிமிடம் ஊற வைத்து பிறகு நன்றாக சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு மூடி வைத்தால் ஐந்து நிமிடத்தில் வெந்து விடும். பருப்பு அதிகமாக குழையாமல் வெந்து வருவதற்கு இவ்வாறு செய்தால்போதும். அரை பதமாக வெந்ததும் உப்பைப் போட்டு கிளறி சிறிது நேரம் குழையாமல் வேக வைத்து எடுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வேக வைப்பதானால் வெறும் வாணலியை அடுப்பில் போட்டு காய்ந்ததும் பருப்பைப் போட்டு லேசாக சூடாக்கி எடுத்து குக்கரில் தண்ணீரே விடாமல் பருப்பைக் கழுவி போட்டால் நீரிலேயே வெந்து விடும்.
பாத்திரத்தில் வேக வைத்தால் வெந்தவுடன் நீரை வடிகட்டி விட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து அதில் வேக வைத்த பாசிப்பருப்பைப் போட்டு கிளற வேண்டும். தேங்காயைத் துருவி எடுத்துக் கொண்டு பாசிப் பருப்பைக் குழையாமல் தேங்காய்த் துருவலை அதில் சேர்த்து பக்குவமாக கிளறி கீழே இறக்க வேண்டும். கறிவேப்பிலையை அரைத்து சேர்த்து கிளறி விட்டால் மணமாக இருக்கும். தேவையானால் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம்.
ஆர் .ஜெயலெட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

