மிளகுக் குழம்பு
வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிளகுக் குழம்பு
தேவையானவை:
மிளகு- 25 கிராம்
காய்ந்த மிளகாய்- 4
புளி -ஒரு எலுமிச்சம்பழம் அளவு
உளுந்தம் பருப்பு, மஞ்சள் பொடி, கடுகு, பெருங்காயப் பொடி- தலா ஒரு தேக்கரண்டி உப்பு , எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் புளி, உப்பை சேர்த்து விழுதாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.
குழம்பு நன்றாகக் கொதித்து வந்தவுடன், வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயப் பொடி தாளித்துக் கொட்டி குழம்பை அடுப்பில் இருந்து கீழே இறக்கவேண்டும். மிளகுக் குழம்பை சாதத்தில் ஊற்றிச் சாப்பிட்டால், மழைக்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் அஜீரண பிரச்னைகள் சரியாகும்.
ஆர்.ஜெயலெட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

