4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பழைய பாடல்: ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே!

ஏட்டில் படித்ததோடு      இருந்துவிடாதே - நீ ஏன் படித்தோம் என்பதையும்      மறந்துவிடாதே! நாட்டின் நெறிதவறி      நடந்துவிடாதே - நம் நல்லவர்கள் தூற்றும்படி      வளர்ந்துவிடாதே! மூத்தோர்சொல் வார்த்தைகளை   

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:20 am

ஏட்டில் படித்ததோடு

     இருந்துவிடாதே - நீ

ஏன் படித்தோம் என்பதையும்

     மறந்துவிடாதே!

நாட்டின் நெறிதவறி

     நடந்துவிடாதே - நம்

நல்லவர்கள் தூற்றும்படி

     வளர்ந்துவிடாதே!

மூத்தோர்சொல் வார்த்தைகளை

     மீறக்கூடாது - பண்பு

முறைகளிலும் மொழிதனிலும்

     மாறக்கூடாது!

மாற்றார் கைப்பொருளை நம்பி

    வாழக்கூடாது - தன்

மானமில்லாக் கோழையுடன்

     சேரக்கூடாது!

துன்பத்தை வெல்லும் கல்வி

     கற்றிட வேணும்!

சோம்பலைக் கொல்லும் திறன்

     பெற்றிட வேணும்!

வம்பு செய்யும் குணமிருந்தால்

     விட்டிட வேணும் - அறிவு

வளர்ச்சியிலே வான் முகட்டைத்

    தொட்டிட வேண்டும்!

வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்

     பெருமைவர

மேதைகள் சொன்னதுபோல்

     விளங்கிட வேண்டும்!

பெற்ற தாயின் புகழும், நீ பிறந்த

     மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு

    வாழ்ந்திட வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.