சிறுகதை: வெளவால்!

அது ஒரு மண்டபம்; முன்னொரு காலத்தில் புனிதப் பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் தங்கிச் செல்லும் சத்திரமாகப் பயன்பட்டது. இப்போது பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்தது. அதன் இடிபாடுகளிடையே ஏராளமான வெüவால்கள் வசித
Updated on
3 min read

அது ஒரு மண்டபம்; முன்னொரு காலத்தில் புனிதப் பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் தங்கிச் செல்லும் சத்திரமாகப் பயன்பட்டது. இப்போது பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்தது. அதன் இடிபாடுகளிடையே ஏராளமான வெüவால்கள் வசித்து வந்தன. அந்த வெளவால்கள் ஒரு நாள் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. 

உலகின் அனைத்து வகை வெளவால்களின் பிரதிநிதிகளும் அந்தக் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டன.  சுவற்றுக்கு உள்ளே வெளியே தொற்றியபடியே மேற்கூரையில்  தொங்கியபடியும் கணக்கற்ற வெüவால்கள் அந்தப் பாழடைந்த மண்டபத்தில்  குழுமின. அந்த வெüவால்கள்  தங்களின் மனக்குறைகளைக் கொட்ட ஆரம்பித்தன.

÷""இந்த மனுஷங்களுக்கு நம்மளைக் கண்டாலே பிடிக்க மாட்டேங்குது! முகத்தை சுழிச்சுக்கிட்டு நைஸô அங்கிருந்து நகர்ந்து போயிர்றாங்க!'' என்று கூட்டத்தை  ஆரம்பித்து வைத்தது ஒரு பழந்தின்னி வெüவால். இதற்கும் பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். பழங்களை மட்டும் தேடிச் சென்று தின்று தீர்க்கும்.

÷""இத்தனைக்கும் நாமளும் மனுஷங்க மாதிரியே பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பிராணிதான்! இருந்தாலும் நமக்கு இப்படி ஒரு மதிப்பு! நாம எல்லாம் போன பிறவியில கோவில் சொத்தை கொள்ளையடிச்சவங்களாம்! அதான் இந்தப் பிறவியில வெüவாலா மாறி அலையிறோமாம்! இது அவுங்க நினைப்பு!'' என்றது இன்னொரு பழந்தின்னி வெüவால். இதற்கு அத்திப்பழங்கள் என்றால் உயிர்.

÷""மனுஷங்களைச் சொல்லி குத்தமில்லை! பறவையும் இல்லாத, மிருகமும் இல்லாத வித்தியாசமான உருவ அமைப்பு நமக்கு! ஜந்து மாதிரி! இதுல மத்த பிராணிகள்ல்லாம் நேரா நின்னுச்சுனா நாம மட்டும் தலைகீழாத் தொங்குறோம்!'' சொன்னது ஒரு மீன் தின்னி வெüவால். இந்த வெüவாலுக்கு மீன்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.

÷""அதுக்கு என்ன பண்றது? நம்ம கைகால் எலும்புகளோட அமைப்பு நம்ம தோலாலான றெக்கையை இயக்கிறதுக்குத்தான் பயன்படுதே ஒழிய, நம்ம உடம்பு எடைய சுமக்குறதுக்கு இல்லை! அதான் தலைகீழாத் தொங்கிறோம்!'' - குறுக்கிக்கிட்டு சொன்னது ஒரு பூச்சி பிடிக்கும் வெüவால்.

÷""இதாவது பரவாயில்லை! மற்ற பிராணிகளுக்கெல்லாம் வசிக்கிறதுக்கு ஒரு இடம்னா நாம மட்டும் இருட்டுக் குகை, பாதாளக் கிணறு, கல்லறைகள்னு இப்படி ஏடாகூடாமான இடங்கள்லதான் வசிக்குறோம்! நாம இரவுப் பிராணி வேற! இது பத்தாதா மனுஷங்களுக்கு நம்மளை வெறுக்குறதுக்கு!'' என்று ஒரு தேன்குடிக்கும் வெüவால்.

÷இவைகள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட ஒரு பெரிய வெüவால், ""சாதாரண மனுஷங்களாவது பரவாயில்லை! நம்மளைப் பார்த்து முகத்தைச் சுழிச்சிட்டு மட்டும் போயிர்றாங்க. இந்த சினிமாக்காரங்க ரொம்ப மோசம். நம்மளை தீயசக்திகளுக்கு ஒப்பா காட்டுறாங்க. ஏதாவது பேய் பிசாசு பூதத்தை உருவமா காட்டணும்னா அவங்களுக்கு மொதல்ல நினைவுக்கு வர்றது நம்மளோட தோற்றம்தான். நம்ம உருவத்தை தீயசக்திகளோட உருவமா மாத்திர்றாங்க. இதுவே எல்லாருக்கும் மனசுல பதிஞ்சு போயி நம்மளைக் கண்டாலே கிலி பத்திக்குது அவங்களுக்கு!'' என்றது தவளைப் பிரியனான அந்த வெளவால்.

÷""இந்த மனுஷங்களை புரிஞ்சுக்கவே முடியலை. சில பறவைகள் மிருகங்களை உசரத்துல தூக்கிவைச்சு சாமி மாதிரி கும்பிடுறாங்க. அதே சமயம் நம்மளை மாதிரியானவங்களை அசிங்கமா, அவலமா நினைச்சு கேவலப்படுத்துறாங்க. சாமி மாதிரி கும்புட வேண்டாம். நம்மளையும் ஜீவராசியா மதிச்சு  ஏத்துக்கிட்டா போதும். அதுக்கு என்ன வழி?'' - குறுக்கிட்டு கேட்டது பூச்சிப் பிடிக்கும் வெளவால்.

÷""அதுக்கு நம்மளைப் படைச்ச கடவுள்கிட்டதான் போயி கேக்கணும்!'' என்றது கூட்டத்திற்குத் தலைமை வகித்த வயது முதிர்ந்த ஒரு கிழட்டு வெளவால். அதன்படி கடவுளிடம் சென்று நியாயம் கேட்பது என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

÷இதற்காக மேலுலகம் சென்று கடவுளை சந்தித்து முறையிட்டன. கடவுள் அவைகள் சொன்னதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் பேசினார். ""எல்லாத்தையும் மாதிரி நாம இல்லைனு எதிர்மறையா சிந்திச்சு வருத்தப்படுறதை விட்டுட்டு யாருக்கும் இல்லாத விஷயம் நமக்கு இருக்குனு

நேர்மறையா சிந்திச்சு நீங்க ஏன் மகிழ்ச்சியா இருக்கக் கூடாது?'' - கடவுள் அவைகளிடம் எதிர்கேள்வி கேட்டார். பின்னர் அவரே சொன்னார்.

÷""எல்லாரும் நேரா பாக்குற உலகத்தை நீங்க தலைகீழா பாக்குறதே ஒரு மாறுபட்ட அனுபவம்தானே. பூமியில வாழுற ஒவ்வொரு உயிரினங்களும் தங்களோட இருப்பிடத்துக்காக எவ்வளவு பெரிய போராட்டங்களை நடத்துது தெரியுமா? இந்த விஷயத்துல உங்களுக்குப் போட்டியே கிடையாது. அடர்ந்தக் காடு, இருண்ட குகை, உத்திரம்னு எது கிடைச்சாலும் அதுல போயி அடைஞ்சுக்குவீங்க. ஒருசில பறவைகளும், பூச்சிகளும் உங்களுக்கு இடைஞ்சலா இருந்தாலும், உங்கக் கூட்டத்தைப் பார்த்ததும் அதுங்க அங்க இருந்து நழுவிப் போயிருதுங்க. இதுவும் ஒரு கொடுப்பினைதானே!'' என்றார் அவர்.

÷வெளவால்கள் அமைதியாய் இருந்தன. தான் சொன்ன விஷயங்களில் அவைகள் அவ்வளவாகத் திருப்தியடையவில்லை என்பதைக் கடவுள் உணர்ந்துக் கொண்டார்.

÷அவர் "" உங்ககிட்ட அற்புதமான ஒரு விஷயம் இருக்கு. அதை நீங்க வசதியா மறந்துட்டீங்க?'' என்று பீடிகைப் போட்டார்.

÷வெளவால்கள் கடவுள் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கத் தயாராயின. அவர் சொன்னார்.

÷""உங்களுக்குக் கண்கள் இருந்தாலும் பார்வைத் திறன் குறைவு. நீங்க பறக்கும் போது ஒருவித ஒலிகளை எழுப்பியபடி பறக்குறீங்க. அது மிகை ஒலி. அதை மனுஷங்களால கேட்க முடியாது. அந்த ஒலி நீங்க பறக்குற பாதைல ஏதாவது தடைகள் இருந்தா அதுமேல பட்டு எதிரொலியா உங்ககிட்ட திரும்பி வருது. அந்த எதிரொலிய உள்வாங்கியபடி பறந்து போறீங்க. குறுக்கும் நெடுக்கும் ஒலி ஒழுங்கில்லாம அதிவேகமாப் பறந்தாலும் வழில இருக்குற தடைகள் மேல மோதிராம கண்ணிமைக்குற நேரத்துல இலாவகமா விலகிப் போற உங்களோட அதி அற்புத ஆற்றலைப் பார்த்து மூக்கில் விரல் வைக்காத மனுஷங்களே கிடையாது தெரியுமா?'' என்றார். இப்போது வெளவால்கள் நிமிர்ந்து உட்கார்ந்தன.

÷÷""இன்னைக்கு சோனார் கருவிகள் மூலமா எதிரொலி தத்துவத்தைப் பயன்படுத்தி கடலுக்கு அடில இருக்குற நீர்மூழ்கிக் கப்பல்களோட இடத்தைக் கூட கண்டுபிடிச்சுர்றாங்க. இது மாதிரியான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அடிப்படை உந்துசக்தி நீங்கதானே!'' என்றார் கடவுள். வெளவால்கள் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்திருந்தன. அவரே தொடர்ந்து பேசினார்.

÷""மனுஷனுக்கு நிறைய உணர்வுகள் இருக்கு. கோபம், மகிழ்ச்சி, துக்கம்னு அந்த உணர்வுகள் அவனுக்கு மாறி மாறி வருது. அதுல அச்சம் ஒரு உணர்வு. இந்த பிரபஞ்சத்துல மனுஷனுக்கு அச்சத்தைக் கொடுக்கிற விஷயங்கள் நிறைய இருக்கு. நடுநிசியில் அமைதியைக் கெடுக்கும் கோட்டான்களின் அலறல், நாய் நரிகளின் ஊளை, இருட்டு வண்டுகளின் ரீங்காரம், மரக்கிளைகளின் ஊடாகப் பாய்ந்து வரும் ஊளை, அதீத நிசப்தம், கடலின் பேரிரைச்சல்னு அச்சத்தைக் கொடுக்கிற விஷயங்கள் ஏராளம். அதுல நீங்க ஒரு வகை. ஒரு பாறை இடுக்குல இருந்து விடுக்கினு வெளிப்படுற வெளவாலைப் பார்த்தவுடனே மனுஷனுக்கு அடிவயித்துல ஒரு கிலி பரவணும்! பரவும்! இந்த அச்சம்தான் தனக்கு மேல ஒரு அமானுஷ்ய சக்தி இருக்குறதுன்னு அவனை நம்ப வைக்கிற. அந்த நம்பிக்கை அது என்னன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தைக் கொடுக்குற. அந்த ஆர்வம் முயற்சியையும், அந்த முயற்சி அவன் வாழ்க்கைக்குத் தேவையான அர்த்தத்தையும் சுவாரசியத்தையும் கொடுக்குது!'' என்றார்.

÷அவர் சொன்னதைக் கேட்ட வெளவால்களுக்குக் கடவுள் வேறு, இந்த பிரபஞ்சம் வேறு என்று பிரித்து எண்ணத் தோன்றவில்லை. இந்தப் பூமி, அதன் இயற்கை, அதில் சகல ஜீவராசிகள் என்று ஒவ்வொன்றும் ஏதேனும் ஓர் அளப்பறிய நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அவைகள் தெள்ளத் தெளிவாகப் புரிந்துக் கொண்டன.

÷ தங்கள் தோற்றம் குறித்து அவைகளுக்கு இருந்த வருத்தம் இப்போது அறவே நீங்கியது. தாங்கள் படைக்கப்பட்ட விதத்திற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்து பூமிக்குத் திரும்பிய அவைகள் தத்தம் இடம் நோக்கி மகிழ்ச்சியுடன் பறந்து சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com