* நான் செஸ் விளையாடப்போறேன்... உனக்கு இந்த விளையாட்டு தெரியுமாடா?
என்ன! தெரியுமாவா? நீ போய் கிரவுண்டுல இரு, நான் ஷூ மாட்டிக்கிட்டு வந்துடறேன்...!
பூ. திலகவதி, த/பெ. சி. பூவராகசாமி, பழைய எண்: 5 சி. புதிய எண்: 17, பேரம்பிள்ளை சந்து, சிதம்பரம்- 608001.
ஆபரேஷன்லே உங்க வயித்துலேர்ந்து எடுத்ததுதான் இதெல்லாம்! உடம்புக்கு நார்ச் சத்து வேணும்னு யாரோ சொன்னாங்கன்னு இனிமே தேங்கா நாரெல்லாம் திங்காதீங்க, பிளீஸ்!
ஜீ. வி. சுபாஷ், சேலம்.
பூட்டை உடைச்சி திருடிக்கிட்டு போயிட்டான்னு பதற்றமே இல்லாம சாதாரணமா சொல்றீங்களே?
பூட்டுதானே... போனால் போகட்டும்.
மு. பெரியசாமி, விட்டுக்கட்டி.
யிஅம்பயர் ஊழல் பண்ணிட்டாரா! எப்படி?
இதுவரைக்கும் டாஸ் போட்ட நாணயத்தையெல்லாம் அமுக்கிட்டாராம்!
பி. பாலாஜிகணேஷ், 240, வேளாளர் தெரு, கோவிலாம்பூண்டி, சிதம்பரம் - 608 002.
ஏட்டு மனைவி: நம்ம தோட்டத்துல விளைஞ்ச சுரைக்காயை யாருமே வாங்க மாட்டேங்கிறாங்க!
ஏட்டு: ஏன்?
ஏட்டு மனைவி: ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுங்குறாங்க!
எம். சேக்உசேன், வடகரை.
என்ன அண்ணாச்சி, பூச்சி அரிச்சி ஓட்டை போட்ட பருப்பா கொடுத்துருக்கீங்க!
நீங்க எழுதிக் கொடுத்த சீட்டுல "துவாரம் பருப்பு ஒரு கிலோ'ன்னு எழுதியிருந்திச்சி, அதான்!
க. விஜயராகவன், அரியலூர்.
வாரம் 2 டி-சர்ட் பரிசு: நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றோருக்கு வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


