பழைய பாடல்: விடுதலை
பாடிப் பாடிப் பறந்து வாழும் பச்சைக் கிளியைப் பிடித்தவன் - சொல் பயிலும் கிளியைப் பிடித்தவன் தேடிப் பெற்ற கூண்டில் விட்டு தின்னப் பழங்கள் கொடுத்தனன் - மெல்ல சிரித்துப் பேசிப் பார்த்தனன். கூண்டில் விட்ட

பாடிப் பாடிப் பறந்து வாழும்
பச்சைக் கிளியைப் பிடித்தவன் - சொல்
பயிலும் கிளியைப் பிடித்தவன்
தேடிப் பெற்ற கூண்டில் விட்டு
தின்னப் பழங்கள் கொடுத்தனன் - மெல்ல
சிரித்துப் பேசிப் பார்த்தனன்.
கூண்டில் விட்ட கிளியும் மனிதன்
கொடுமை எண்ணித் துடித்தது - நெஞ்சம்
குன்றிக் கண்ணீர் வடித்தது.
மாண்டு விட்ட போதும் உரிய
மரத்தில் வாழ நினைத்ததே - அவன்
மனமும் கசிய இளைத்ததே.
துடிது டித்துப் பறக்க எண்ணும்
சோகக் கிளியைக் கண்டவன் - அந்தச்
சோலைக் கிளியைக் கண்டவன்
கொடுமை என்று திறந்து விட்டான்
கூண்டுக் கதவை நொடியிலே - அதன்
கொடிய வாழ்வு விடியவே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

