சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கைஅரசு மருத்துவமனையில் தடையற்ற சேவைகள்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அருண்ராஜ் உத்தரவுஇந்தியா, லத்தீன் அமெரிக்காவுடன் புதிய கூட்டணி: இஸ்ரேல் பிரதமர்

பழைய பாடல்: விடுதலை

பாடிப் பாடிப் பறந்து வாழும் பச்சைக் கிளியைப் பிடித்தவன் - சொல் பயிலும் கிளியைப் பிடித்தவன் தேடிப் பெற்ற கூண்டில் விட்டு தின்னப் பழங்கள் கொடுத்தனன் - மெல்ல சிரித்துப் பேசிப் பார்த்தனன். கூண்டில் விட்ட

Updated On :

பாடிப் பாடிப் பறந்து வாழும்

பச்சைக் கிளியைப் பிடித்தவன் - சொல்

பயிலும் கிளியைப் பிடித்தவன்

தேடிப் பெற்ற கூண்டில் விட்டு

தின்னப் பழங்கள் கொடுத்தனன் - மெல்ல

சிரித்துப் பேசிப் பார்த்தனன்.

கூண்டில் விட்ட கிளியும் மனிதன்

கொடுமை எண்ணித் துடித்தது - நெஞ்சம்

குன்றிக் கண்ணீர் வடித்தது.

மாண்டு விட்ட போதும் உரிய

மரத்தில் வாழ நினைத்ததே - அவன்

மனமும் கசிய இளைத்ததே.

துடிது டித்துப் பறக்க எண்ணும்

சோகக் கிளியைக் கண்டவன் - அந்தச்

சோலைக் கிளியைக் கண்டவன்

கொடுமை என்று திறந்து விட்டான்

கூண்டுக் கதவை நொடியிலே - அதன்

கொடிய வாழ்வு விடியவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.