நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 17: நகராட்சி

நராட்சி நிர்வாகத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.    1. ஆணையர் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நிர்வாக அமைப்பு    2. நகர் மன்றத் தலைவரின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நிர்வாக அமைப்பு    ஆணையர் என்பவர் ம
நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 17: நகராட்சி
Updated on
1 min read

நராட்சி நிர்வாகத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

   1. ஆணையர் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நிர்வாக அமைப்பு

   2. நகர் மன்றத் தலைவரின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நிர்வாக அமைப்பு

   ஆணையர் என்பவர் மாநில அரசால் நியமிக்கப்படும் அரசு அதிகாரி. நகர்மன்றத் தலைவர் என்பவர் மக்களின் பிரதிநிதி.

 நகராட்சி நிர்வாகத்தில் பல துறைகள் இருக்கும் அல்லவா? இந்தத் துறைகள் யாவும் ஆணையரின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும். நகராட்சியின் பல திட்டங்களை செயல்படுத்துபவரும் ஆணையர்தான்.

   நகராட்சி நிர்வாக அமைப்பில் இன்னும் சில அரசு அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள். நகர் நல அலுவலர், மேலாளர், நகராட்சிப் பொறியாளர், வருவாய் அலுவலர், கணக்காளர், நகர அமைப்பு அலுவலர், மற்றும் தனி அலுவலர்கள் ஆகிய அனைவரும் ஆணையரின் நிர்வாகத்தின் கீழ் செயல்படுவார்கள்.

நகர்மன்றத் தலைவரை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

   முன்பு நகர்மன்றத் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுத்தார்கள். முதன்முதலில் 1986 - ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்களே நேரடியாக வாக்களித்து நகர்மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். 2001 - ஆம் ஆண்டுவரை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் இதுபோல மக்களே நேரடியாக நகர்மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு 2006 - ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் நகர்மன்ற உறுப்பினர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்கள்.

வெற்றிபெற்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் வாக்களித்து நகர்மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரும் உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவராக இருப்பார்.

   நகராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கும். முப்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட நகராட்சி அமைப்பில் இருபது உறுப்பினர்கள் இருப்பார்கள். ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட நகராட்சி அமைப்பில் ஐம்பத்தியிரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள்.

நகராட்சி உறுப்பினராகப் போட்டியிடுபவரின் பெயர், அந்தக் குறிப்பிட்ட நகராட்சியின் ஏதாவது ஒரு வார்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

   நகர்மன்றத் தேர்தலில் உறுப்பினராகப் போட்டியிட சில தகுதிகள் உள்ளன.

1. வேட்பு மனு கொடுக்கும் தேதியில் வேட்பாளருக்கு 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

   2. ஒதுக்கீடு செய்யப்பட்ட நகர சபைகளில் போட்டியிடுபவர் அந்தக் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம். அதாவது, பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடர் வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், அந்தக் குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே போட்டியிட முடியும்.

3. அதுபோல பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட நகர சபைகளில், பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும்.

   4. வேட்பாளர் இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com