""எதுக்கு டாக்டர் இன்னமும் அகலமா வாயைத் திறக்கச் சொல்றீங்க?''
""உள்ளே விழுந்த என்னோட டார்ச் லைட்டை எடுக்கத்தான்!''
எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.
* ""குரங்குகிட்டே "செல்' இருந்தாலும், அத வச்சி குரங்கு யார்கிட்டேயும் பேசமுடியாது!''
""ஏன்?''
""குரங்குகிட்டே இருக்கிறது "விலங்கு செல்'லாச்சே!''
நா. ஆமினத்து ஜாக்ரினா, 46, புது கிழக்குத் தெரு, கீழக்கரை
இராமநாதபுரம் மாவட்டம் - 623517.
* ""அந்த ஹோட்டல்லே சாப்பிட்டா நாள் முழுக்கச் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்!''
""அடடா! அவ்வளவு டேஸ்டா இருக்குமா?''
""டேஸ்டா இருந்தாத்தான் உடனே சாப்பிட்டுடலாமே!''
அ. அழகப்பன், 1051, குமரன் தெரு, காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் - 630 551.
""வெள்ளை மாத்திரை கொஞ்சம் கசக்குது. சிவப்பு மாத்திரை கொஞ்சம் இனிக்குது!''
""சரி, இதை எதுக்கு என்கிட்டே வந்து சொல்றே?''
""நீங்கதானே டாக்டர் மாத்திரை சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்லச் சொன்னீங்க!''
ஆ. துர்காதேவி, பெரிச்சிப்பாளையம்.
""ஆபீஸ்ல யாராவது தூங்கினா என் கிட்டே வந்து சொல்லு''
""சரி சார்!''
""நான் தூங்கிக்கிட்டு இருந்தாக்கூடப் பரவாயில்லை. என்னை எழுப்பி சொல்லு!''
பி. பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
""நீ செஞ்ச குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?''
""அதையெல்லாம் படிச்சிருந்தா நான் ஏன் ஐயா இந்தத் தொழிலுக்கு வரப்போறேன்!''
மெ. அ. கா. பாத்திமா, காயல்பட்டினம் .
வாரம் 2 டி-சர்ட் பரிசு: நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும்
பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றோருக்கு வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

