ஆன்றோர் அறிவுரை சான்றாகும்!
நகம் வளரவளர நறுக்கு நகத்தில் சேருமே அழுக்கு நோயைத் தருமே நமக்கு நலம்பெற சுத்த மாக்கு! பிரசால் மேலும் கீழும் பற்கறை போகத் தேய்ப்பாய் பல்லை நன்றாய் துலக்கு பல்லில் அகலும் துணுக்கு! தேகப் பயிற்சி செய்வாய


நகம் வளரவளர நறுக்கு
நகத்தில் சேருமே அழுக்கு
நோயைத் தருமே நமக்கு
நலம்பெற சுத்த மாக்கு!
பிரசால் மேலும் கீழும்
பற்கறை போகத் தேய்ப்பாய்
பல்லை நன்றாய் துலக்கு
பல்லில் அகலும் துணுக்கு!
தேகப் பயிற்சி செய்வாய்
தேகம் பொலிவுறும் சிறப்பாய்
தேகம் தேய்த்துக் குளிப்பாய்
சுகமும் பெற்றுக் களிப்பாய்!
காய்கனி கீரை வகைகள்
குறுந்தா னியங்கள் பலவும்
உணவில் தினமும் சேர்ப்பாய்
ஊட்டம் பெறுமே உடலும்!
காலை மாலையில் சாலையில்
காலார நடப்பாய் ஓரமாய்
மூளையும் கண்களும் ஒளிபெற
முளைவிட்ட தானியம் சாப்பிடு!
சுகத்துக் காதாரம் வீட்டின்
சுற்றுப் புறச் சுத்தமாகும்
அகத்தின் தூய்மைக் காதாரம்
ஆன்றோர் அறிவுரை சான்றாகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...