மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பாவம்...

ஒரு முறை மகாத்மா காந்திஜியைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அப்போது அவர், காந்திஜியிடம், "ஐயா, இந்த உலகத்தில் மன்னிக்க முடியாத பாவங்கள் என்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்' என்று கேட்டார். காந்திஜி புன்மு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:36 pm

ஆ.விஜயலஷ்மி

ஒரு முறை மகாத்மா காந்திஜியைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அப்போது அவர், காந்திஜியிடம், "ஐயா, இந்த உலகத்தில் மன்னிக்க முடியாத பாவங்கள் என்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்' என்று கேட்டார்.

காந்திஜி புன்முறுவலுடன், "ஒரே ஒரு பாவம் என்று நான் கூறமாட்டேன். மொத்தம் ஏழு பாவங்கள் உள்ளன. அவை - கொள்கைப் பிடிப்பு எதுவுமில்லாத அரசியல் ஒரு பாவம். நேர்மை எதுவுமில்லாத வியாபாரம் ஒரு பாவம்.

ஒழுக்கம் இல்லாத கல்வி ஒரு பாவம். பெற்றோர் மற்றும் குருவை மதிக்காமலிருப்பது ஒரு பாவம். மனச்சாட்சி இல்லாத இன்பம் ஒரு பாவம். மனிதாபிமானம் எதுவுமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம். தியாகம் இல்லாத இறைவழிபாடு ஒரு பாவம் ஆகும்!' என்று கூறி முடித்தார். வந்தவர் திருப்தியுடன் எழுந்து சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.